Tuesday 26 March 2013

ஓமியோபதி ஓர் அறிமுகம்

சிலருக்கு மனித இனமே  நன்றிக் கடன்பட்டிருக்கிறது. அறிவியல் கல்வி மருத்துவம் முதலிய தளங்களில் அவர்கள்  உள்ளனர்.  காரண கர்த்தாகளுக்கு மறைவே இல்லை. தனிப்பட்ட முறையில் நான் நன்றி காட்ட வேண்டியவர்கள் சிலர்.  அவர்களுள் ஹானிமன் ஒருவர். சாமுவேல் ஹானிமன் ஓமியோபதி  தந்தை.உலகம் கொண்டாடப்பட வேண்டியவர்.
அப்படி அவர் என்ன செய்தார்?. நோகாமல் நோயை குணப்படுத்தும் முறையைக் கண்டார். ஓமியோபதி- முள்ளை முள்ளால் எடுக்கும் உத்தி. நோயை நோயால் போக்கும் விந்தை. நம்மில் பலருக்கு அலோபதி மீது வெறுப்புண்டு. வேண்டாத வெறுப்பாகத்தான் அலோபதியைப் பலர் நாடுகின்றனர். 
                                                     


 

 ஜவ்வரிசி போன்ற மாத்திரைகள். இருப்பினும்,  சிறுத்தாலும் காரம் போகாத கடுகுகளான அவை, வாமன அவதாரங்கள். மகாத்மா காந்தியும் ஈர்த்த ஓமியோபதி  என் உடல் நலனைப் பேணுகிறது. ஓமியோபதி மருத்துவம் உளவியல் குறிகளையும் கணக்கில் கொள்கின்றது என்பதால் என்னை ஈர்த்ததில் வியப்பு ஒன்றும் இல்லை. தற்சமயம் உலகின் சிறந்த மருத்துவம் ஓமியோபதி என்பது அனுபவம் வாய்ந்தோர் கருதுவர். ( இதை விடச் சிறந்த மருத்துவம் சித்தா  என்றாலும் மூலப்பொருள்கள் சரிவரக் கிடைக்காததாலும் இரகசியமாக இருப்பதாலும் பிரபலமாகவில்லை). ஓமியோபதி கண்டுபிடிப்பு மனித வரலாற்றில் முக்கியத்துவமானது. ஆனால் இந்தச் சமுகம் சரிவரப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது வருத்தத்திற்குரியது. எளிமை, குறைந்த விலை, பாதுக்காப்பு, பக்க விளைவின்மை முதலிய காரணங்களால் ஓமியோபதி மைய மருத்துவமாகவும் மற்றவை மாற்று மருத்துவமாகவும் அமைந்தால் மனித இனம் நலம்பெறும் என்பது என் கருத்து.

சுமார் 1993 காலகட்டத்தில் எனக்கு  ஓமியோபதி அறிமுகமானது. அதுவரை பெரும்பாலோர் பின்பற்றும் அலோபதி மருத்துவத்தையே நானும் நாடினேன். அம்மருத்துவத்தில் எனக்கு முழு நிறைவு ஏற்படவில்லை. அப்போது ஓமியோபதி மருத்துவ நண்பர்கள் கிடைத்தனர். சில என் நோய்களுக்கு மருந்து எடுத்துக் கொண்டேன். அலோபதிக்கு மேலே வேறு எதேதோ செய்வதை உணர்ந்தேன்.  எனது பல நோய்க்குறிகள் மறைவதை முழுமையாக உணர்ந்தேன். அவர்களிடம் ஓமியோபதி மருத்துவம் குறித்து விவரம் கேட்டேன். அடிப்படைகளை விளங்கிக் கொண்டேன். நான் தமிழ் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பயிலும் போது ஓமியோபதி நூல்களையும் பெற்றுப் படிக்கலானேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எனது நோய்க்குறிகளுக்கு மருந்துகள் தேட முற்பட்டேன். இச்செயல் எனக்கு மருத்துவ ஆராய்ச்சி போல் இருந்தது. சலிக்காமல் மருந்துகள் தேடி போட்டுப் பார்த்தேன். தொடக்கத்தில் பல தோல்விகள். இருப்பினும் விடுவதாக இல்லை. தனியாக நூல்கள் (materia medica, repertory ) வாங்கி தீவிரமாக இறங்கினேன். கொஞ்சம் கொஞ்சமாக தெளிவு கிடைத்தது. பல நோய்க்குறிகளுக்கு  மருந்து வாங்கிப் போட்டுப் பார்த்தேன், என் சுயஆய்வு வீண் போகவில்லை. பழைய என் நோய்க்குறிகளில் பல காணாமல் போயின. குறிப்பாகத் தலைவலிக்கு 5 ஆண்டுகள் கண்ணாடி அணிந்துவந்த நான், ஒரே நாளில் கண்ணாடியைத் தூக்கி எறியும்படி ஆகியது ஓமியோபதி. வியந்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு  நன்கு உறங்கினேன். கனவுகள் தெளிவாகத் தெரிந்தது. ஓமியோபதி மதிப்பு என்னுள் ஆழமானது. அன்றுமுதல் ஓமியோபதி அன்றி வேறு எடுத்துக் கொள்வதில்லை. ஒருவரின் உடல் இயல்புக்கு ஏற்ப  சுமார் 25 ஓமியோபதி மருந்துகளைத் தேர்ந்தெடுத்து கைவசமாகிக் கொண்டால் 80 விழுக்காடு மருத்துவரிடம் செல்லத்தேவை இல்லை. Ars Alb, Apis, Anti tart, Calc Phos, Nat mur, Eupat, Graph,Heper, Ipec, Lyc,Sil, Thuj,   Arn, Acon,Bell, Bry, Canth, Carb.Veg, Dulc, Gels, Merc,  Nit.Ac, Nux.V, Puls, Rhus.T, Sul,   முதலிய மருந்துகள் பொதுவில் இருக்க வேண்டியவை. விபத்து, தொற்று போன்ற திடீர் தாக்குதலுக்கு என்று சில தேவைப்படலாம்.

என் அனுபவத்தை வைத்துக் கொண்டு உறவினர்கள் நண்பர்கள் முதலியோருக்கு மருந்து கூறுவேன். அவர்களும் பலனடைந்து வருகின்றனர். இந்த எல்லையை விரிவாக்க வேண்டி, முகம் தெரியாத உங்களுக்கும் மருத்துவ ஆலோசனை வழங்க விரும்புகிறேன். நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்... உங்கள் நோய்த்தன்மைகள் பற்றி விரிவாக  எனக்கு அனுப்பவும். மருந்துப் பெயர் மற்றும் எடுத்துக் கொள்ளும் விதம் கூறுகிறேன். தமிழில் தட்டச்சு செய்ய  http://tamileditor.org  அல்லது   https://translate.google.com/?sl=ta#  பயன்படுத்தவும். மின்னஞ்சலிலும் அனுப்பலாம்.. tptravi@yahoo.co.in 


                                                என் நோய்க்குறி